Tuesday, December 29, 2009

Durga Bhajan

I have been listening to a lot of music - thanks to the Music season in Chennai and a rough semester being over. Bhajans have been a part of music concerts for a long time now. In this blog we will talk about one bhajan about Durga. Swami Brahmananda's Durga bhajan has been popularized by many musicians. A fine rendition of this bhajan (in Durga) is given by Nithyasree (broadcast in Podhigai). Here is the embedded video .
Pandit Bhimsen Joshi has also given a fine rendition of this bhajan (It is a 30 seconds clip). My wife Dr. Janaki Krishnamoorthy has helped me with the edit of the translation of the whole song and my good friend (from IIT Kanpur graduate student days) Dr. Kattamuri Ekanadham provided detailed translations.

in ITRANS:

jaya durge durgati parihaariNi, shumbha vidaariNi maataa bhavaani ||
aadishakti para brahma svarupiNi, jaga janani caturveda bakhaani ||
brahmaa shiva hari arcana kiinho dhyaana dharata suranara muni j~naanii ||
aShTabhujaa kara khaDga viraaje si.mhasavaara sakalavaradaani ||
brahmaananda caraNa me.m aaye bhavabhaya naasha karo mahaaraaNi ||


in Devanagiri:

जय दुर्गे दुर्गति परिहारिणि शुम्भ विदारिणि माता भवानि॥
आदिशक्ति पर ब्रह्म स्वरुपिणि जग जननि चतुर्वेद बखानि॥
ब्रह्मा शिव हरि अर्चन कीन्हो ध्यान धरत सुरनर मुनि ज्ञानी॥
अष्टभुजा कर खड्ग विराजे सिंहसवार सकलवरदानि॥
ब्रह्मानन्द चरण में आये भवभय नाश करो महाराणि॥

Translation in English:

Victory to Durga, who removes troubles, the destroyer of the demon Shumba, mother and the consort of Lord Siva
She is the primordial energy, the embodiment of the absolute, source of the all creation (or the universe), the one praised by four vedas.
She is worshiped by Brahma, Shiva and Vishnu and meditated upon by ordinary people and by sages
She has eight arms, carrier of the sword (to destroy evil forces) and is seated on a lion
Salutations at the blissful feet of the empress who removes the fear of rebirth.



prati-pada-artham (Thanks to Dr. Kattamuri Ekanadham) - Detailed Meaning:

जय दुर्गे = Victory to Durga

दुर्गति परिहारिणि = who removes troubles

शुम्भ विदारिणि = who destroyed the demon Shumba

माता भवानि = mother Bhavaani (consort of Lord Siva)

आदिशक्ति = the primordial force

पर ब्रह्म स्वरुपिणि = manifestation of "para-brahma", the ultimate reality

जग जननि = mother of the whole world

चतुर्वेद बखानि = praised in the four vedas

ब्रह्मा शिव हरि अर्चन कीन्हो = worshiped by Brahma, Shiva and Vishnu

ध्यान धरत सुरनर मुनि ज्ञानी = meditated upon by gods ("sura"), and on earth by humans, sages and the enlightened ("jnaani")

अष्टभुजा कर खड्ग विराजे = adorned by swords in the hands from all the eight arms

सिंहसवार = riding on a lion

सकलवरदानि = grants boons ("vara") to all

ब्रह्मानन्द चरण में आये = Brahmananda (the author of this poem) comes to (or salutes) your feet

भवभय नाश करो = remove the fear of this "samsaara" (cycle of life and death)

महाराणि = (Oh ) empress!

Saturday, December 26, 2009

Devi Mahatmyam Slokam 21

Slokam 21:

in Itrans:

yaa devi sarvabhUteShu bhraantiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That Devi who dwells in our hearts and strengthen our resolve
(Even as we wander in ignorance Err and toil lacking in confidence)
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் (நாம் தப்பு செய்தாலும் மன நம்பிக்கை இழந்தாலும் ) நமதி இதயத்தில் இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!


Devi Mahatmyam Slokam 20

Slokam 20:

in Itrans:

yaa devi sarvabhUteShu maatR^iruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु मातृरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who is the mother of all beings in this universe
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் எல்லோருக்கும் தாயின் வடிவமாக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!



Devi Mahatmyam Slokam 19

Slokam 19:

in Itrans:

yaa devi sarvabhUteShu tR^iShTiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु तृष्टिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That Devi who is the cause of our joy and comfort
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது மன திருப்திக்கு காரணமாக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 18

Slokam 18:

in Itrans:

yaa devi sarvabhUteShu dayaaruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु दयारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who nests us in our compassion
Namaskar! Namskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது கருணைக்கு காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!



Devi Mahatmyam Slokam 17

Slokam 17:


in Itrans:

yaa devi sarvabhUteShu smR^itiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who abides in all that we remember
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது ஞாபக சக்த்திக்கு காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!


Devi Mahatmyam Slokam 16

Slokam 16:

in Itrans:

yaa devi sarvabhUteShu vR^ittiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That Devi who dwells in all means of our livelihood,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது எல்லா வாழ்க்கைற்கும் காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 15

Slokam 15:



in Itrans:

yaa devi sarvabhUteShu laxmiiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That Devi who is visible in our success and prosperity
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!



Devi Mahatmyam Slokam 14

Slokam 14:

in Itrans:

yaa devi sarvabhUteShu kaa.ntiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु कांतिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That Devi who exists in all that is beautiful,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் எல்லா அழகிற்கும் காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!


Devi Mahtmyam Slokam 13

Slokam 13

in Itrans:

yaa devi sarvabhUteShu shraddhaaruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥



Meaning in English:

That Devi pervades all beings as their faith
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமது நம்பிக்கையின் காரணாமக இருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!







Devi Mahatmyam Slokam 12

Slokam 12

in Itrans

yaa devi sarvabhUteShu shaantiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥


Meaning in English:

That devi who soothes and calms us
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமக்கு அமைதியையும், சாந்த்தியையும் தருகிரார்க்ளோ
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!




Devi Mahatmyam Slokam 11

Slokam 11:

in Itrans

yaa devi sarvabhUteShu lajjaaruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:
या देवि सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

When we are humble, it is Devi (in us) who is modest.
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

நாம் அகங்காரம் இல்லாமல் இருக்கும்பொழுது அந்த தேவியே காரணம்
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!


Thursday, December 24, 2009

Devi Mahatmyam Slokam 10

Slokam 10:

in Itrans

yaa devi sarvabhUteShu jaatiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु जातिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

She is what is unique in each species,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் எல்லா படைப்பிலும் தனிமையாக இருக்கிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 9

Slokam 9:

in Itrans

yaa devi sarvabhUteShu xaa.ntiruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु क्षांतिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who is a personification of forgiveness and patience,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமக்கு மன்னிப்பையும், பொறுமையும் தருகிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 8

Slokam 8:

in Itrans

yaa devi sarvabhUteShu trushNaaruupeNa sa.msthitaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who causes our thirst and quenches it too,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமக்கு தாகத்தையும், தாகசாந்தியையும் தருகிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 7

Slokam 7:

in Itrans

yaa devi sarvabhUteShu shaktiruupeNa sa.msthitaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who infuses us with strength and courage,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் நமக்கு பலத்தையும், தைரியத்தையும் தருகிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 6

Slokam 6:

in Itrans

yaa devi sarvabhUteShu ChayaaruupeNa sa.msthitaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु छयारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who abides in all beings, like one's shadow,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் மனிதர்களின் நிழலைப்போல் அவர்களுடன் இருக்கிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 5

Slokam 5:

in Itrans

yaa devi sarvabhUteShu xudhaaruupeNa sa.msthitaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning (English)

That Devi who expresses herself as our hunger and cravings,
Namaskar! Namaskar! Namaskar to that Devi

Meaning (Tamil)

எந்த அம்மன் மனிதர்களின் பசியிலும், உணவை விரும்புவதிலும் இருக்கிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 4

Slokam 4:

in Itrans

yaa devi sarvabhUteShu nidraaruupeNa sa.msthitaa|
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who dwells within us when we rest,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil:

எந்த அம்மன் மனிதர்கள் உறங்கும் பொழுதும் அவர்களுடன் இருக்கிரார்களோ வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!


Devi Mahatmyam Slokam 3


Slokam 3:

in Itrans

yaa devi sarvabhUteShu budhdhiruupeNa sa.msthitaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु बुध्धिरूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

That Devi who eases understanding and intelligence in all
Namaskar! Namaskar! Namaskar to that Devi

Meaning in Tamil:

எந்த அம்மன் எல்லொருக்கும் புத்தியையும், அறிவையும் கொடுக்கிரார்களோ, வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Devi Mahatmyam Slokam 2

Slokam 2:


in Itrans

yaa devi sarvabhUteShu cetanetyabhidhiiyate |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri

या देवि सर्वभूतेषु चेतनेत्यभिधीयते।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning in English:

Devi Who encompasses the consciousness of all beings,
Namaskar! Namaskar! Namaskar to that Devi!

Meaning in Tamil

எந்த அம்மன் எல்லொரின் எண்ணங்கிலும் வியாபித்துக்கொண்டு இருக்கிரார்களோ, வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Tuesday, December 22, 2009

Devi Mahathmyam or Ode to Durga Devi

In this Durga Stotra (Devi Mahatmyam 5:14-76), Devi's Shakti (not only physical Strength, but also courage, to fight injustice and destroy evil for the welfare of the people) is glorified. (I am taking this from Prarthana - A book of Hindu Psalms by Arun Shanbhag and adding my own translations into Tamil)
http://en.wikipedia.org/wiki/Devi_Mahatmyam has four hymn parts. The "Ya Devi" is the third part of the hymn also known as Tantrik Devi Suktam. You can listen to these 21 verses here.


Slokam 1:

in Itrans

yaa devi sarvabhUteShu viShNumaayeti shabditaa |
namastasyai namastasyai namastasyai namo namaH ||

in Devanagiri:

या देवि सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः॥

Meaning (English)

That Devi who is omnipresent in all beings of this Universe,
Namaskar! Namaskar! Namaskar to that Devi

Meaning (Tamil)

எந்த அம்மன் எல்லா உலகங்கிலும் வியாபித்துக்கொண்டு இருக்கிரார்களோ,
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அந்த அம்மனுக்கு எங்கள் வந்தனம்!

Saturday, August 29, 2009

Navaratri and other fees

மேற்படி வைபவத்தில் கல ந்துகொள்ள கட்டணம்.
தம்பதிகளாக சன்டி ஹோமம் முழுவதுமாக ஏற்று நடத்த 15000/-
[ச்ண்டி ஹோமம்,சுஹாசினி பூஜை,கன்னிகா பூஜை,வடுக பூஜை வரை]
ஒரு நாள் மண்டகப்படி 3000/-
[லக்ஷ்மி பதித்த 1/2 கிராம் த ங்ககாசு பூஜையில் வைத்து தரப்படும்]
மஹாபிஷேக க்கட்டணம் 501/-
சண்டி ஹோம மஹா சங்கல்பம் 501/-
லக்ஷார்ச்ச்னைகட்டணம் 75/-
ஒரு நாள் புஷ்ப அலங்காரம் 2000/-
பிரசாத உபயம் 5000/-
தனி நபராகவோ,கூட்டாகவோ பங்கேற்கலாம்
வீதி உலா சிறப்பு அலங்காரம் 8000/-
சிவாச்சர்ய ஸம்பாவனை 7500/-
வச்திர தானம் 10,000/-
6 ந 9*5 வேஷ்டி,9 கஜம் புடவை,பாவடை,ஜாக்கெட்,பிரம்மச்சாரி வேஷ்டி துண்டு
28-09-09 மாலை 7:30 மணிக்கு புஷ்ப அலங்காரம் முடி ந்அ பின் நடை பெறும் அம்பாள் திருவீதி உலாவிற்க்கு பக்தர்கள் கல ந்து கொள்ள வேண்டுகிறோம்.
அன்பர்கல் தினசரி வழிப்பாட்டிற்கும் பெருமளவில் பங்கேற்றும் உற்சவ வைபவங்களிலும் உபயதாரர்களாக கல ந்டுகொண்டு நவராத்திரி உற்சவத்தை சிறப்பாக நடத்தி அம்பாளின் அருளைப்பெற வேண்டுகிறோம்
பக்த அன்பர்கல் தங்களால் இயன்ற காணிக்கயைப் பொருளாகவோ,பணமாகவோ கொடுத்து ஆல்ய அலுவலகத்தில் ரசீது பெற்று க்கொள்ளவும்
பக்தர்களுடன்
ஆலய நிர்வாகிகள்

நம் ஆலயத்தில் நடைபெறும் விசேஷ பூஜைகள்
பிரதி செவ்வாய் தோறும் மாலை 7:30- 8:30 மணிக்கு துர்கா சூக்த பாரயணம்.ஸ்ரீ ஜய விஜய துர்கா ஜபம் கட்டணம் ரூ 20/-
மாதத்தில் 3-வது புதன் மாலை 6:30 -௭:300 மணிக்கு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி,ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை,ஜபம் கட்டணம் ரூ.20/-
பிரதி வெள்ளி தோறும் மாலை 7:30-- 8:30 மணிக்கு ஸ்ரீ பஞ்ச மாத்ருகா பூஜை[காயத்ரி,அண்ணபூர்ணா,துர்கா,லக்ஷ்மி ஸரஸ்வதி] கட்டணம் ரூ.20/-
பிரதி சனி தோறும் மாலை 7:00 -- 8:00 மணிக்கு நவக்ரஹ காயத்ரி ஜபம்,ஸ்ரீ சுதர்ஸன ஜபம் கட்டணம் ரூ20/-
பிரதி ஞாயிறு தோறும் மாலை 4:30 -- 6:00 மணிக்கு ஸ்ரீ சரபேஸ்வர பூஜை,ஜபம் கட்டணம் ரூ.20/-
வளர்பிறை பஞ்சமி மாலை 6:00 -௮:00 மணி ஸ்ரீ சுயம்வரா பார்வதிஹோமம் கட்டணம் ரூ.201/-
வளர்பிறை அஷ்டமி மாலை 6:30 -௭:30 ஸ்ரீ தேவி புஷ்பாஞ்சலி பூஜை[ நவாவரண பூஜை] கட்டணம் ரூ.201/-
தேய்பிறை அஷ்டமி மாலை 6:30 -௭:30 மணிக்கு சாகம்பரி பூஜை கட்டணம் ரூ.151/-

Thursday, August 27, 2009

நிகழ்ச்சி நிரல் நவராத்திரி

நிகழ்ச்சி நிரல்
18-09-09 வெள்ளி இரவு 8:00 மணிக்கு நவகலச ஸ்தாபனம் நவாவரண பூஜைதீபாராதனை
19-09-09 27-09-09காலை 8:30 மணிக்கு மஹாபிஷேகம்
10:00 மணிக்கு லட்க்ஷார்ச்சனை
28-09-09திங்கள் காலை 7:00 மணிக்கு அனுக்ஞை
விக்னேஸ்வரபூஜை
தனபூஜை
ஸ்ரீபூஜை
ஸ்ரீ கணபதி ஹோமம்
நவக்கிரஹ ஹோமம்
ஸ்ரீ சண்டி ஹோமம்
மாலை 2:00 மணிக்கு பிரசாத வினியோகம்
இரவு 7:30 மணிக்கு அம்பாள் வீதிஉலா
28-09-09 அம்மன் திருவீதிஉலா இரவு 7:30 மணியளவில் நடை பெறும்

வீதி உலா வரும் இடங்கள்
துர்கா காலனி,மெட்ரோ பிலாட், சாம்ராஜ் நகர், சிவகாமி நகர்,பஜனை கோயில் தெரு,கனகராஜ் தெரு,பொன்னியம்மன் கோயில் தெரு,கலை வானி தெரு, காமரஜபுரம்,பவந்தியார் தெரு,வேளாச்ச்ரி ரோடுவழியாக ஆலயத்தை வ ந்தடையும்.


Wednesday, August 26, 2009

நவராத்திரி பூஜை

அருள்மிகு அஷ்டாதஸபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகா ஆலயம்
காயத்ரி சத்சங்கம்,துர்காகாலனி,ராஜகீழ்
ப்பாக்கம்,சென்னை-
24-வது ஆண்டு நவராத்திரி லட்க்ஷர்ச்சனை மகோத்சவ பத்திரிகை

துதிக்கின்ற கரம்பற்றிகைதூக்கினிலை நிறுத்தி
விதிமாற்றி வினையகற்றி விரும்பிடும் வரமருளும்
பதினெட்டு கரத்தாளே பசும்பொன் எழிலாளே
அதிட்டான நவசக்ர அருள் நிதியே சரளமம்மா
கொடுக்கும் கொடை கரம் பதினெட்டுயாள்-வரம்
கொடுக்கும் கருணைகடல் துர்காம்பிகையாள்
கொடுக்கும் பலனலவள வாழ்வுதனை பெற்று-அள்ளிக்
கொடுக்கும் வள்ளல் அவள் பாதம் பற்றி பணிந்திடுவோம்


பேரன்புடையீர்,வணக்கம்.
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விரோதி வருஷம் புரட்டாசிமாதம் 3-ம்தேதி[19-09-09]சனிக்கிழமை முதல் புரட்டாசி 11-ம்தேதி[27-09-09]ஞாயிற்றுக்
கிழமை முடிய பிரதி தினம் காலை 8:30 மணிக்கு ஸ்ரீ துர்காம்பிகைக்கு விசேஷ அபிஷேகமும் தொடர் ந்து காலை 10:00 மணிக்கு லக்க்ஷார்சனையும் நடைபெற உள்ளது. புரட்டாசி 12-ம்தேதி[28-09-09] திங்கட்கிழமை காலை 7:00 மணிக்குசண்டி ஹோமம்,சுஹாசினிபூஜை, கன்னிகா பூஜை,வடுகபூஜை, சிவாச்சாரியார் சம்பாவணை,பிரசாட வி நியோகமும் நடைபெறும்.

Sunday, August 2, 2009

விண்ணப்பம் -

ஆலயத்தில் தற்சமயம் பிரதோஷம்,சங்கடகர சதுர்த்தி,பௌர்ணமி பூஜை சிறப்புற நடைபெற் வேளையில் பக்த கோடிகளின் மன அமைதி,உறுதி,ஆற்றல்,வெற்றி,குறைவற்ற செல்வம், நிறைவான வாழ்வு,கல்வியில் சிறப்பு,குடும்ப ஒற்றுமை,அன்புடன் இணைந்த வாழ்வு,திருமண பாக்யம்,மற்றும் புத்ர பாக்கியம்,ஒவ்வொருவரது நிறைவான வாழ்விற்காகவும்,சகல சௌபாக்கியங்களை பெறவும்,தொடர் ந்டு கீழ்குறுப்பிட்டுள்ளபடி பூஜையும்,தொடர் கூட்டு வழிபாடும் நடைபெற உள்ளதல் பக்தர்கல் அனைவரும் தவறாது கல ந்து க்கொண்டு அம்பாளின் அருலாசியுடன் நலமும்,வளமும் பெற்று இன்புற பிரார்த்திகிறோம்.

ஞாயிறு:மாலை 4:30 -- 6:00 மணிவரை சரபேச்வரபூஜையும் ஜபமும் தொடர் ந் து அம்பிகையின் கூட்டு வழிபாடு

செவ்வாய்:மாலை 3:00 -- 4:300 மணிக்கு ராகுகால பூஜையும் தொடர் ந் து 6:30-7:30 மணிக்கு துர்காசூக்தமும்,காயத்ரி ஜபம்

புதன்: ஆஙில மாதத்தில் 3வது புதன்கிழமை ஹயக்ரீவர் பூஜை ஜபம்

வெள்ளி :மாலை 7:00-8:00 மணிக்கு சூக்தம் பாராயணம் மற்றும் பஞ்சமாத்ருகாபூஜை,காயத்ரி,அன்னபூர்ணா,துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி,அஷ்டோத்ர பாராயணம்

வளர்பிறை அஷ்டமியில் திரிசூல புஷ்பாஞ்சலி

தேய்பிறை அஷ்டமியில் சாகம்பரி பூஜை

வளர்பிறை பஞ்சமியில் ஸ்யம்வர பார்வதி ஹோமம் மாலை 5:30-7:30 ம்ணி

அன்பர்கள் திரளாக வ ந் திருந்துஅம்பாளின் அருலாசியை ப்பெற்று சிறப்பு பெற வெண்டுகிறோம்

பக்தகோடிகளுடன் ஆலய நிர்வாகத்தினர்

Useful Religious links

பக்தர்ளுக்காக சில அறிவிப்புகள்


கணேச பக்தர்களுக்கு பிரியமான இணைதளம் www.ganesh.us

ருத்ராட்ச்ர மகிமை விபரம் தரும் பக்கம் www.rudrakshacollection.com

குருவாயுரப்பன் பக்தர்கள் விசிட் செய்யவேண்டிய பக்கம்http://www.guruvayurdevaswom.org/

வள்ளலார் பற்றி அறிய www.vallalar.org

சிவபெருமானைப் பற்றி அறிய http://www.pradosham.com/home.php

நவகிரக கோவில்களை ப்பற்றி அறியhttp://www.templenet.com/Tamilnadu/Navagraha/navagraha.html

ஷீரடி சாயி பாபா மகிமையை அறியwww.starsai.com

பாபா பக்தர்களுக்குwww.radiosai.org


ராகவேந்தரரை ப்பற்றி அறியwww.pujyaya.org

இந்து தர்மதகவல்கள் அறியwww.balagokulam.org

கோவில்களின் சிறப்பு அறியwww.hindubooks.org

பிரணவ மந்திரத்தை ஓதுவதின் மகத்துவம் அறியwww.meditationeasy.com

அனுமன் பற்றி அறிய www.panchamukha.org

கொலுவைக்கும் வகைகள் ப்பற்றி அறிய http://www.mailerindia.com/hindu/veda/index.php?navarathiri and http://www.hindu-blog.com/2007/10/navarathri-bommai-golu-ideas-and-how-to.html

உலக நலம் காக்க செல்லவேண்டிய தளம்www.itakethevow.com

Sunday, July 26, 2009

துர்கா சுக்தம்

One of the important prayers in Upanishad is Durga Suktham - This prayer appears in one section of Titreya Upanishad called Maha Narayana Upanishad. A nice English Translation (again there could be many different interpretations - this is one such) is given in this
English Translation by P. R. Ramachander

Jatavedase sunavama soma marathee yatho nidhahadhi veda,
Sa na parshadathi durgani viswa naaveva sindhum durithathyagni. 1

जातवेदसे सुनावामा सोमा मराठी यथो निधाहधि वेदा ,
सा न पर्शदाठी दुर्गनी विस्वा नावेव सिन्धुम दुरिथाथ्यग्नी . १


Our oblations of Soma to the fire god,
May he, the all knowing one destroy all those who do not like us,
May that divine fire lead us out of all perils,
Like a captain takes his boat across the sea,
And also save us from all wrongs.


Thaam agni varnaam thapasa jwalanthim vairochanim karma phaleshu jushtam,
Durgam devim saranamaham prapadhye, sutharasi tharase nama. 2

थाम अग्नि वर्णं तापसा ज्वालान्थिम वैरोचानिम कर्म फलेषु जुष्टं,
दुर्गम देवीम सरनामहम प्रपद्ये , सुथारासी थारसे नामा . २

I take refuge in the divine mother Durga*,
Who shines like a fire due to her penances,
Who resides in actions and their fruits and makes them effective,
And I salute her who helps us cross our difficulties.
* It could be translated as Mother of difficulties also

Agne thwam paaraya navyo asmaan swasthibhirathi durgani viswa,
Pushscha prithwi bahula na urvee bhava thokaaya thanayaya shamyoh. 3

अग्ने त्वं पाराय नव्यो आस्मां स्वस्थिभिराठी दुर्गनी विस्वा ,
पुश्स्चा पृथ्वी बहुला न उर्वी भाव थोकाया थानायाया शम्योह . ३


Oh God of fire, you are worthy of praise,
For by novel methods you help us cross,
The difficulties and make us happy,
May our land in this earth become extensive,
May the land for growing crops become large,
And be pleased to join our children and,
Their children with joy and happiness.

Vishvaani no durghaa jathaveda sindhunaa nava durithathi parshi,
Agne athrivan manasaa grina no asmakam bodhayithwa thanoo naam. 4

विश्वानि नो दुर्गहा जथावेदा सिन्धुना नवा दुरिथाठी पारशी ,
अग्ने अथ्रिवन मनसा ग्रीन नो अस्माकं बोधयिथ्वा थानू नाम . ४

Oh Jatha Vedas who is the destroyer of all sins,
Make us cross all our troubles like a boat,
Which takes us to the other shore without problems,
Oh Fire, protect us like the sage Athri, who would take care of us,
Mindful of our safety and our happiness.

Prithana jitham saha mana mugram agnim huvema paramath sadhasthath,
Sa na parshadathi durgani viswa kshamaddhevo athi durithatyagni. 5

प्रिथाना जिथं सहा मन मुग्राम अग्निम हुवेम परमाथ सधास्थाथ ,
सा न पर्शदाठी दुर्गनी विस्वा क्षमाद्धेवो अथी दुरिथात्याग्नी . ५

We invoke the fierce Fire God who is the leader of us all.
And who is the killer of all our enemies from the highest place,
To take us across all difficulties and all that is perishable and protect us.

Prathnoshika meedyo adhvareshu sanacha hota navyascha sadhsi,
Swacha agne piprayaswa asmabhyam cha soubhahya maya jaswa. 6

प्रथ्नोशिका मीद्यो अध्वरेषु सनाचा होता नाव्यस्चा सध्सी ,
स्वाचा अग्ने पिप्रयास्वा अस्मभ्यम च सौभाह्या माया जसवा . ६

Oh Fire God, you are praised during sacrifices,
And always increase our happiness, and exist as sacrifices,
Which are olden and those which are new,
Please make us, who are only yourself, happy,
And grant us good fortune from all our sides.

Gobhir jushta mayujo nishithktham thavendra vishnor anusancharema,
Naa kasya prushtam abhisamvasaano vaishnavim loka iha madhayantham. 7

गोभिर जुष्ट मयुजो निशिथ्क्त्हम थावेंद्र विश्नोर अनुसंचारेमा ,
ना कस्य पृष्टं अभिसंवासानो वैश्नाविम लोक इह मधायांतहम . ७

Oh Lord, you are not connected with sin and sorrow,
Permit us to always serve you who pervades all wealth,
May the Gods who live in the highest region make me,
Who adores Vishnu, delighted and happy and grant my wishes.




Thursday, April 30, 2009

paal abhishekam பாலபிஷேகம்

அருள்மிகு அஷ்டாதச மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு நிகழும் விரோதி வருடம் சித்திரை மாதம் 25ந் தேதி[08-05-09] வெள்ளிக்கிழமை பௌர்னமி திதியில் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ரிஷப லக்னத்தில் காலை 8.00 மணியளவில் பால்குட ஆவாகன பூஜையும் தொடர்ந்து ஊர்வலமாக மெட்ரோ குபேர கணபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.00 மணி முதல் 12.30 மணிக்குள் அஷ்டாடசபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெறும். பக்தகோடிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Sunday, April 5, 2009

Devi Dieties

பிரகாரத்தில் இருக்கும் விக்கிரகஙள்
அம்மனுக்கு வலது பக்கத்தில்லுள்ள தேவிகள் கௌமாரி, மகேஷ்வரி,
நடுவில் வைஷ்ணவி
இடது பக்கத்தில் இந்திராணி துர்கை

Wednesday, March 25, 2009

Sakthi Gayatri

ஓம் காத்யாய்னாய ச வித்மஹே
கன்யகுமாரி ச தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்

Meaning:
May we realise Katyayani, the Sakti. Let us meditate on Kanyakumari, the virgin goddess. And may that Durga, illumine us.

Tuesday, March 24, 2009

Some slokams

துர்காம்பிகையின் அருளைப் பெற கூறும் சில துதிகள்



1)துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஜந்தோ:
ஸ்வஸ்த்தை ஸ்ம்ருதாமதிமதீவிசுபாம் ததாஸீ
தாரித்ரிய துக்கபய ஹாரினிகா த்வதன்யா
ஸர்வோபகாரகாரணாய ஸதார்த்தசித்தா


2)ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்காதேவி சரணம்
துர்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்து ஓடும்
தர்மம காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்,சர்வ மங்களமும் கூடும்(ஜெய)


பொற்கரங்கள் பதினெட்டும் சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப்பொட்டும் வெற்றிப்பாதையை காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே அவள் ஆதிசக்தி பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்ரம்வில்லும் அம்பும் அங்குசம்,வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்ப்பாள்,திங்களை முடிமேல் சூடி நின்றாள்
சிங்கத்தின் மேல் வீற்றிப்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையற்க்கரசியும் அவளே அங்கயற்கன்னியும் அவளே(ஜெய)

Sunday, March 15, 2009

Temple history

அருள்மிகு அஷ்டாதசபுஜமகாலக்ஷ்மி துர்காம்பிகாஆலயம், துர்கா காலனி,இராஜகிழ்பாக்கம்,சென்னை 73.

கிழக்கு தாம்பரத்திலிருந்து நான்கு கிலோமீட்டிரில் வேளாச்சேரி சாலையை ஒட்டி மேற்படி பதினெட்டு கை துர்காம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. இதில் பரிவார மூர்த்தங்களாக வினாயகர், விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர், சாஸ்தா, வள்ளி தெய்வ நாயகி சமேத ஷண்முகர், லக்ஷ்மி சமேத அனந்தபத்மனாபர்,ஆஞ்சனேயர்மற்றும் நவகிரகங்களும் உள்ளன. ஆலய பின்புறத்தில் அரச மரத்தடியில் நாகர்,வினாயகரும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆலயதில் வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்து வருகிறாள்.

1965-இல் தின்னம் T.S. நடேச ஐயர் மேற்கண்ட அபூர்வமான ஆலயத்தை முதலில் சிறியதாக பிரதிஷ்டை செய்தார்.
மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுரம் ஆதினம், மற்றும் சேலத்தின் ஸ்கந்த ஆசிரமம் இவற்றைத் தவிர தமிழ் நாட்டில் இதுவே பதினேட்டு கை துர்காம்பிகையின் ஆலயமாக அமையப் பெற்றது. நடேச ஐயர் பல ஆண்டுகள் காயத்ரி சத் சங்கம் என்ற ஒரு சிறிய அமைப்பில் பேராசிரியர் ஜெகபதி உள்பட பலரின் உதவியுடன் இவ்வாலயத்தில் தினப்படி பூஜை, நவராத்ரி பூஜை, விஜயதசமி,சண்டி ஹோமம் இவற்றை நடத்தி வந்தார்.

1977-ல் நடேச ஐயர் காலமானபிறகு அவர் மகன் ந. சேதுரத்தினத்தின் உதவியுடன் பக்தர்களே ஆலயத்தை நிர்வகித்து வந்தனர். 1986-இல் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஒரு விசேஷ கமிட்டி நியமனம் ஆயிற்று. இதில் ஆர் சுவாமி நாதன் காரியதரிசியாகவும், மற்றும் பேராசிரியர் திரு. ஜெகபதி, ஆர். கணேச ஐயர், திருமதி கல்பனா சீனிவாஸ் திரு.வெங்கட்ராமன் இவர்கள் முக்கிய பொறுப்பேற்று இருந்தனர். 1987-ல் நடேச ஐயர் மகன் ந. சேது ரத்தினம் இச்சங்கத்துடன் ஒத்துழைத்து ஆலயத்தை அதற்கு நன்கொடையாக வழங்கினார். அதே சமயம் அவர் மனைவி திருமதி சேது ரத்தினம் அக்கம் பக்கத்து நிலத்தையும் கட்டிடத்தையும் குறைந்த கிரயத்திற்கு கொடுத்தார். உடனே அச்சங்கம் பெற்றுக்கொன்ட ஆஸ்திகளை ஒரு டிரஸ்ட்டாக ரெஜிஸ்டர் செய்து ஆலய நிர்வாகத்தை நடத்தலாயிற்று. ந. சேது ரத்தினதை ஆயுள் டிரஸ்டியாக நியமித்தது. வழக்கம்போல் பூஜைகளும் விழாக்களும் நடந்து வந்தன.

நிற்க, அருகாமையில் இருந்த மெட்ரோ பிளாட்ஸ் உரிமையாளரான N. நடராஜ ஐயர் ஆலயத்தை பெரியதாகக் கட்டிக் கொடுக்க வேண்டுதல் கொண்டு விரும்பியதால் 1989-ல் பேராசிரியர் S.ஜெகபதி காரியதரிசியாக இருக்கையில் டிரஸ்ட் அவரை ஆகம சாஸ்த்திரங்களின் படி ஆலயத்தை புதுப்பித்தும் பெரிதாகக் கட்டித்தரக் கேட்டுக்கொண்டது. சென்னை காளிகாம்பாள் கோவிலின் மூத்த சிவாச்சாரியார் வந்திருந்து கொடுத்த ஆலோசனையின்படி நூதன பெரிய ஆலயத்தின் அமைப்பு நிர்ணயிக்கபட்டது. அதன்படி நடராஜ ஐயர் இரண்டு ஆண்டுகளில் நூதன பெரிய ஆலயத்தைக் கட்டி கொடுத்தார். 1991-ல் பதினெட்டு கை துர்காம்பிகையின் பெரிய மூர்த்தமும், அதன் மேல் தக்க பீடத்தில் ஆதியில் பிரதிஷ்டை ஆன மூர்த்தமும் இதர பரிவார்த்த மூர்த்தங்களும் புதிதாகச் சேர்க்கப் பட்ட சாஸ்தாவும், பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1991 தை மாதம் நூதன பெரிய ஆலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவில் சுப்ரமணிய குருக்களின் தலைமையில் வெகு விமரிசையாக மேற்படி டிரஸ்டினால் நிறைவேற்றப்பட்டது. அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தையும் நடராஜ் ஐயர் வழங்கினார். இவ்வாலயத்தில்தான் தற்போது அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இவ்வாலயத்தில் இரு மூல
மூர்த்தங்கள் இருப்பது குறிப்படதக்கது.

1991-க்குப் பிறகு டிரஸ்டி நிர்வாகத்தை கவனித்து வருகிறது . நடராஜ் ஐயரின் மருமகனான D. வெஙகட்ராமன் இரண்டாவது ஆயுள் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார். சரோஜா வெங்கடராமன் நிர்வகத்துடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளார். சமீபத்தில் திரு. ராமச்சந்திரன் இணைக்கப்பட்டார். ஏற்கனவே இருந்ததவர்கள் தொடர்ந்து பொறுப்புக்களை கவனித்து வருகிறார்கள். நித்தியப்படி பூஜைகள், விசேஷ பூஜைகள், இராகுகால பூஜைகள்,பிரதோஷ பூஜை, சித்திரா பௌர்ணமி பால்குடம், ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா,விஜயதசமி, அன்று சண்டி ஹோமம், மாலையில் அம்பாள் புறப்பாடு இவை யாவும் அம்பாளின் அருளால் செவ்வனே நிறைவேறி வருகின்றன. அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் செய்யப் பட்டிருக்கிறது. மற்றும் பல பக்தர்களின் நன்கொடைகளின் மூலம் ஆலயம் வளர்ந்திருக்கிறது.

நிற்க,2008 தை மாதம் பல அன்பர்கள் பல திருப்பணிகளை நிறைவேற்றிக்
கொடுத்து, மற்றும் பலருடைய உதவியுடன் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக அம்பாளின் அருளால் நிறைவேறியது.

ஆலயத்தின் மேற்கொண்ட முக்கிய தேவைகள் பின்புறத்தில் ஒரு மடப்பள்ளி, ஒரு அலுவலக அறை, ஆதியில் அம்பாள் பிரதிஷ்டையான ஸ்தலத்தில் காஞ்சி பெரியவாளால் அருளப்பட்ட ஆலோசனைப்படி, வில்வமரம் நடுதல், இப்பணிகள் நிற்கின்றன.
ஆலயம் மேலும் வளர பக்தர்களிடமிருந்தும்,அன்பர்களிடமிருந்தும் நன்கொடைகள் தேவைப்படுகின்றன. ஆலயத்திற்க்கு உதவி, எல்லாம் வல்ல அருள்மிகு அஷ்டாதச புஜ மகா லக்ஷ்மி துர்கையின் அருளை பெற வேண்டுமென்று டிரஸ்ட் பொது மக்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறது.

Slokam

துக்கம் நீக்குபவளே
கவலையை தீர்ப்பவளே
யாவரையும் காப்பவளே
தேனை அளிக்கின்றேன்
இந்தத் தோராய பித்தனின் வினை தீர்ப்பாயோ

Saturday, March 14, 2009

First Post

துர்க்கை அம்மனுக்கு எங்கள் வணக்கம். தொண்டரைக் காப்பாற்றுங்கள்.